விழியதிகாரம் - 6- சந்தோஷ்

விழியதிகாரம் - 6

வர்ணனை - விழியாளின் இதழ்களோடு என் கனாக்கள்
-----------------------------------------------------------------------

அவளின் செவ்விதழில்
வெட்க வரிகள்.-!
கொழத்த உதட்டில்
கொழுந்து எரிகின்றது-
பேராசை உணர்வுகள்.

விழியழகியின்
காதல்மொழி இதழ்கள்
சிந்தும் சொற்களை
பொறுக்கி கோர்த்து
எழுதி எழுதியே
நான் கவிஞன்
என்றாகிவிட்டேன்.

மேலுதட்டிற்கும்
கீழுதட்டிற்கும்
இடையில் முத்தமெழுதி
உறசாகவிருது
பெற்றிடுவேண்டுமே
என் கவி இதழ்கள்..!

உதட்டுக்களத்தில்
முத்தப்பரிசு..!
ஒன்று இருக்கிறதாம்.

அழைப்பாளா..!?
இதழும் இதழும்
சண்டையிட அழைப்பாளா ?

அழைக்கவே மாட்டாள்..?

காதல் சூறாவளியில்
காம நெருப்பு மூண்டாலும்
எப்போதும் காதலிகள் எவளும்
முத்தயுத்தத்திற்கு
சத்தமிட்டு அழைப்பதில்லை.

ஆனாலும் அழைப்பார்கள்.
அவர்களின்
விழியில் அலைப்பாயும்
முழியிலிருக்கும்
வரவேற்பு தொனி...!
---
எனக்குள் வெறியேறிய
ஹார்மோன் ராஜாக்கள்
போரிட துணிந்தால்
பேரழகியின் செவ்விதழ்
கதி என்னாகும்.?
அறியாத விழிநாயகி
என் மீது
மோகத்தை மூட்டி
காமத்தை கூட்டி- என்
இதழ் குறும்பனை
முத்தப்போருக்கு விழியால்
கொஞ்சல்தொனியோடு
வெட்கப்பட்டு இஷ்டப்பட்டு
அழைக்கிறாள்.

யுத்தமொன்று நடந்தால்
ரத்தமென்று பார்க்காமல்
பின்வாங்குவது சரியோ?
கவிவீரனுக்கு அழகோ?

விதிமீறினால் போர்க்குற்றம்..!
விதிமீறாவிட்டால் காதல்குற்றம்..!

அய்யகோ...!
கமலஹாசா... என்ன கொடுமையிது..?

சரி சரி
நான் என்ன
இனப்படுக்கொலையா செய்திடுவேன்
இதழ்சுவைக்கதானே விரைகிறேன்.



(விழியதிகாரம்- தொடரும் )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (7-Sep-14, 6:56 pm)
பார்வை : 125

மேலே