இருந்தும் பயனின்றி பூவும் நானும்

மல்லிகை வாங்கித்தா
என்றேன் ஒரு நாள்
முழம் முப்பது ரூபாய்
என்று முனகியப்படி
திரும்பினாய் நீ


மல்லிகையை நானே வாங்கி வைத்தேன்
என் தலையில் உன்னிடம் கேட்க்காமலேயே
மற்றொரு நாள்

நீ பூ வைத்தால் எனக்கு தலை வலிக்கிறது
என்கிறாய் நீ இப்பொழுது .....

இருந்தும் பயனின்றி
பூவும் நானும்

எழுதியவர் : priyaraj (7-Sep-14, 7:33 pm)
சேர்த்தது : ப்ரியா raj
பார்வை : 64

மேலே