கல்பனா பாரதியின் கவிதையால் பிறந்த வெண்பா
நெடிதுயர் தென்னையும் நீண்டுவளர் பாக்கும்
வடிவான ஆலரசும் வாகாம் - அடிப்பெண்ணே
வேண்டிடும் பக்தருக்கு வேம்பும் கடவுளாம்
மாண்பு மிகுந்த மரம் .
தென்றலாடும் பூமரத்தில் தேன்மலர்கள் சிந்திட
மன்றல் கமழுமே மௌனமாய் - பன்னீர்
தெளித்தே வரவேற்கும், தேன்சிட்டும் பாட
களிப்பால் கிளையசையுங் காண் .