அழிவை நோக்கி
அழிவை நோக்கி
ஆண்டுக்கு மும்மாரி போதும்
அழிப்போம் இயற்கையை வாருங்கள்
இயற்கையை அழிப்பதில் ஒற்றுமை
எல்லோர்க்கும் உண்டென்று அறிவோம்.
தொழிற்சாலை புகைதான் போதுமா
வெடிகளின் புகையும் வேண்டுமே
ஊர்திகள் எழுப்பும் புகையும்
சுற்றுச்சூழலைப் பேணிட வேண்டும்,
செயற்கை வண்ணங்கள் வேண்டும்
உணவுப்பண்டங்கள் அழகைக் கூட்ட
நோய்நொடி நாடிட முனைவோம்
மருந்தாலே புதுநோய்கள் பெறுவோம்.
ஏமாற்றிப் பிழைப்பவர் செழிக்க
ஏமாந்து போவோர் நசுங்க
வேடிக்கை பார்த்து நிற்போம்
*வாக்குரிமையைக் காசுக்கும் விற்போம்.
*வாக்குகளைப்பெற கையூட்டுக் கொடுக்கச் சென்றவர்களின் பணம் கைப்பற்றப்பட்டது பற்றி கடந்த காலங்களில் பலமுறை நாளிதழ்களில் வந்த செய்தி.