உன்னிடம் பேச
ஆயிரம் வார்த்தைகள் என்னிடம்
உன்னிடம் பேசாமல் !
எப்படி முடிகிறது உன்னால்
மட்டும்
யோசிக்காமல் பேச !
யாசிக்கிறேன் என் தமிழை
வார்த்தைகள் கேட்டு உனக்காக !
வாசிக்ககூட முடியவில்லை என்
கவியை எதிரில் நீ !
சிந்திக்காது நீ சிந்திய
சிரிப்பில்தானடி சிக்கல் !
இப்படி
சிக்கித் தவிக்கிறது என்
இதயம் ! இன்னுமா
உதிக்கவில்லை உனக்குள்
என் பெயர் !