என் தோழியாக-வா

மயிலே ஆடு.. என்னோடு சேர்ந்தேயாடு..
மழையும் தாளமிடும் -நான் ஆடினால்
அசைந்து ஆடினால்...!
வான மத்தளமும் கிழியும் -மின்னலாய்...
இவள் வளைந்தாடினால்..!!

மானே ஓடு.. என்னோடு சேர்ந்தேயோடு..
புலியும் ஒளிந்து ரசிக்கும் - நான் ஓடினால்
துள்ளி ஓடினால்...!
மரங்களும் விலகியோடும் -தோழியாய்...
இவள் துரத்தியோடினால்...!!

அன்னமே நட.. என்னோடு சேர்ந்தேநட..
மீன்களும் வழி மறைக்கும் - நான் நடந்தால்
நதியாய் நடந்தால்...!
அதிசயமும் அசந்து போகும் -சிலையாய்...
இவள் மெதுவாய் நடந்தால்...!!

மலரே சிரி.. என்னோடு சேர்ந்தேசிரி..
பாறைகளும் மனம் மகிழும் - நான் சிரித்தால்
சத்தமாய் சிரித்தால்...!
பறவைகளும் சிலிர்த்துப் போகும் -பனியாய்...
இவள் சிணுங்கிச் சிரித்தால்...!!

குயிலே பாடு.. என்னோடு சேர்ந்தேபாடு..
காட்டருவியும் இதமாய் உறங்கிடும் - நான் பாடினால்
இசை பாடினால்...!
வறண்ட காற்றும் இனிக்கும்-தேனாய்..
இவள் இதழ் பாடினால்...!!

எழுதியவர் : மணிமேகலை (11-Sep-14, 9:15 pm)
பார்வை : 136

மேலே