உன்னில் ஒழி ஊழலை - இராஜ்குமார்

உன்னில் ஒழி ஊழலை
======================
இளம்நெஞ்சம் நசுக்கும்
உயிரை மதிக்காத
ஊழலை ஒழிக்க
தன்னார்வ இளைஞருக்கு
தகுந்த வசதியுடன்
ஊதியத்தோடு உருவாக்கினால்
தேசப்புற்றாய் வளரும் ஊழல்
தேசப்பற்று ஊறிய கரத்தால்
காலில் மிதிப்பட்டு சிதைந்து
காணிக்கையாகும் தேச அன்னைக்கு
உலக அளவில் முன்னிலை வேண்டுமெனில்
உன்னில் ஊழலை ஒழி ...!
- இராஜ்குமார்
நாள் :19-5-11