கேஎல் ஏ பி சி உணவகம் வாழ்த்தி

ஏபிசி சாப்பாடு என்றும் தரந்தானே
நாருசி நல்கும் நலந்தரும் - வா!ருசி!
எல்லா உணவும் நினைவில் நிறைந்திடும்
நல்லகடை அய்யூப் கடை.

காலைப் பசியாறல் காண்!பகல் சாப்பாடும்
மாலை இடைவேளை தேநீரும்- வேலை
முடித்துநீ வீட்டை அடைந்தாலும் நாக்கு
துடிக்குமே ! அய்யூப் கடை.

எழுதியவர் : அபி மலேசியா (12-Sep-14, 2:27 pm)
பார்வை : 174

மேலே