ஆயுள் கைதிகள்
உன்னிடம் ஒவ்வொன்றாய்
சொல்லி புரிய வைக்க நான்
குற்றவாளி அல்ல....உன் காதலி
உன்னிடம் ஒவ்வொன்றாய்
விவரித்து வர்ணிக்க
என் வாழ்க்கை ஒன்றும்
நெடு வினா அல்ல.... உன் காதல்
உன்னிடம் ஒவ்வொன்றாய்
எதிர்பார்த்து ஏமாற நான் ஒன்றும்
கோமாளி அல்ல...இது நம் வாழ்கை
நீயும் நானும் காதல் சிறையின் ஆயுள் கைதிகள்