என் எழுத்தென்றும் மெய் எழுத் தாக இன் தமிழ் பாடி வாழ்த்துமே

எழுத்தை பதிய எழுத்துத் தளத்தை
இணைய தளமாய் தந்தவர்
எழுத்தைத் தந்து கருத்தைக் கவர்ந்து
இதய தளத்தில் நிற்பவர்
எழுத்தை எழுதி படைப்பவர்க் கெல்லாம்
இணைப்புப் பாலம் இட்டவர்
எங்கள் ராஜேஷ் குமாரென சொல்லி
இங்கே யாவரும் வாழ்த்துவோம்
ஆங்கில எழுத்தில் பாங்குறப் பதிந்தால்
அதனை தமிழாய் மாற்றியே
ஈங்கிவர் தந்த எழுத்தில் காட்ட
வருந்தொழில் நுட்பம் கூட்டியே
ஏங்கிய மனங்கள் தாங்கிய நினைவை
இன்கவி யாக்க அழைத்தவர்
ஓங்கிய விருதினை வாங்கும் உம்மை
ஒவ்வோர் எழுத்தும் வாழ்த்துமே!
அச்சகம் தேடி அலைந்திட வேண்டா(ம்)
அடுத்தவர் தயவும் இன்றியே
(தட்)டச்சு பதித்த அடுத்த கணத்தில்
அனைவரும் நம்கவி பார்க்கவே
நிச்சயம் எமது எழுத்தை இந்த
உலகம் அறிய வைத்தவர்
உச்சம் தொட்ட ராஜேஷ் குமாரே
உம்மை யானும் வாழ்த்துவேன்
என் எழுத் திங்கே மெய்யெழுத் தாக
அர்த்தம் இன்றி நிற்கையில்
உன் உயிர் எழுத்தே உயிர்மெய் எழுத்தாய்
எந்தன் எழுத்தை செய்தது
என் எழுத்தென்றும் மெய் எழுத் தாக
இன் தமிழ் பாடி வாழ்த்துமே
இன்னும் இன்னும்விருதுகள் பெற்றிட
இராஜேஷ் குமாரை வாழ்த்துவேன்

எழுதியவர் : சு.ஐயப்பன் (18-Sep-14, 5:04 pm)
பார்வை : 160

மேலே