முடி சூடிய மாமன்னன்

அவதரித்தான் ஆடிமாத ஆதிரை நாளில்
சிவனருளால் நற்றவச் செல்வன் -இவனே
இராசேந் திரனெனும் ராசராசன் மைந்தன்
பராக்கிரம மிக்கவேந்த னே !
வானவன்மா தேவி வயிற்றி லுதித்திட்ட
கோனவன் நற்பெருமைக் கூறிடவோ ?-தானத்தில்
மிக்கவன் கம்பீர மேனியன் ஒப்பில்லாப்
பக்தியில் முன்னவ னே !
கங்கைகொண்ட சோழபுரம் கட்டமைத்த மன்னனாம்
செங்கற்கோ யில்மாற்றிச் செப்பனிட்டான் -சிங்கள
நாட்டுடன் போரிட்டே நட்டான்வெற் றிக்கொடி
ஏட்டி லிடம்பிடித்தா னே .
அரியணை யேறியான தாயிர மாண்டு
புரிந்தான் கடல்தாண்டிப் போர்கள் -உரித்தான
சோழவள நாட்டினைச் சொர்க்கபூமி ஆக்கினனே
வாழட்டுஞ் சோழன் புகழ்