என்னை சாகடிக்க
தொட்டில் குழந்தை போல்
என்னை தாலாட்டும்
சில கவிதை மெய் சிலிர்க்கும்
சில கருத்துகள் மனம் வலிக்கும்
கவிதையாகமல் கருத்தும் சொல்லாமல்
உன் ஒற்றை பார்வையாலே
என் மனதை வலிக்க செய்ததென்ன
உன் விழிமொழி தேசமென்ன
களையும் கனவுகள் நீ கொடுத்து
நடு இரவில் உறக்கம் பறித்து
தனிமையில் புலம்ப விட்டு
எல்லா நொடியும் உன்னை நினைக்க வைக்க
எதற்க்கடி காதல் உனக்கு
என்னை சாகடிக்க ???????