கலைந்திட்ட காதல்

அவள் கல்லூரி தோழியுடன் நின்ற,
ஓர் அந்தி மாலை, பனிகள் சூழ்ந்த நேரம், பனிகளை கிழித்து வந்தான் அவன்.அவள் கண்கள் அவனை நோக்கின, வெண் தேகம் இல்லை, அதிகம் கருப்பும் இல்லை, இதற்கு முன் பார்த்திடவும் இல்லை இருந்தும் அவன் உதடு சிரிப்பில் உடைந்துதான் போனவளாய் அவன் வருகையை பார்த்த படி தோழிகள் சூழ நின்றிந்தாள்.

அவன் அவள் அருகில் வருவது போல் இருந்தது, அவனும் அவ்வாறே வந்தவனாய், வெட்கத்தில் நாணினால் கால்களோ தரை கோலம் போட்டபடி..
வந்தவன் அவள் வகுப்பில் உள்ள திவ்யா பெண்ணை விசாரித்தான். அவளோ ஏமாற்ற பார்வையில், அதற்குள் அவன் தன் தங்கை திவ்யாவை அழைத்து போக வந்ததாய் சொல்ல அவளின் வெட்கம் மீண்டும் கரை புரண்டது...

இப்படியான முதல் சந்திப்பு அவன் நினைவில் அன்றைய பொழுது அசை போட்டது. மறுநாளும் அதே இடத்திலஅவன் வருகையை நோக்கியபடி நின்றவளாய் . இப்படியான அவர்கள் சந்திப்பு......

ஒர கண் பார்வை
ஓர் விரல் கூட தொட்டிரா - காதல்
ஒருவர்கொருவர் பரிமாறிய அன்பு
கணிவான வார்த்தைகள் -இவைகள்
உரைத்தது அவர்கள் காதலை....
அவன் பெண்மையை மதிக்கும் கண்ணியம், இடைவெளி விட்டு பழகும் நேர்மை பேச்சு, இதில் அவனை மட்டும் சுற்றிய அவள் மனம்.

இளையராஜா பாடல் கேட்கும் போதெல்லாம் அவன் தோளில் சாய்ந்த சந்தோசம் அவளுக்குள். மாதங்கள் கடந்தன அவளின் காதலும் அவனுக்கு புரிந்திட இருவரும் கண்ணிய காதலை பரிமாறி கொண்டனர்.

தினம் பேச புது புது வார்த்தைகள் அவள் தேட, அவன் அதை கேட்டிட்ட படி அமைதியான புண் சிரிப்புடன். நாட்கள் சென்றன....

முறை பையன் வீட்டில் செய்த ஒப்பந்தத்தால் அவளை முறை பையனுக்கு நிச்சயம் செய்தனர். இன்னும் ஓர் இரு தினங்களுக்குள் அவளின் திருமணம் அவளின் முறை பையனுடன்..

திருமணம் நடக்கும் நாளும் வந்தது........

அனைவர் கண்களிலும் சந்தோசம், அவள் மட்டும் எதோ இழந்தவளாய் சோகங்கள் வருடிய முகத்துடன். தாலியும் கழுத்தில் தொங்கியது. அவள் முன் அவனின் முகம் மட்டும் காட்சியாய்,...

(கலைந்திட்ட அவள் கனவு காதல், தூக்கத்தில் வந்த அந்த இனிய காதல் இனி அவளிடம் இல்லை) நிழல் காதலை சுமந்து நிஜ வாழ்விற்கு அவள் பயணங்கள் தொடர்கிறது......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (25-Sep-14, 10:15 am)
Tanglish : karpanai kaadhal
பார்வை : 290

புதிய படைப்புகள்

மேலே