மேய்ப்பானை மறந்த மந்தைகள்
உன்னை
பத்துமாதம் சுமந்து
பெற்றெடுக்கும் போது
வலி தெரியவில்லை
பாலும் தேனும் ஊட்டி
பசியாற்றும் போது எட்டி
உதைத்தாயே அப்போது
வலி தெரியவில்லை
வளர்த்து ஆளாக்கி
நல்நிலைக்கு கொண்டுவர
அறிவுரைக் கூறும்போது
முகத்தை சுழிப்பாயே
அப்போது வலி தெரியவில்லை
உனக்குத் துணையாக ஒரு
இல்லாளைக் கொண்டுவந்த பிறகு
முதியோர் இல்லத்தில் சேர்த்தாயே
இப்போது தானடா வலிக்கிறது
கண்ணில் நீரோடு
என்னை உன்கூடவே
கூட்டிச் செல்லடா என
ஏக்கத்தோடு நோக்கும்
அன்னையை தவிக்கவிட்டு செல்லும்
அந்ந மகனுக்குத் தெரியுமா
நாளை தனக்கொரு இடம்
இங்கு காத்திருக்குத்தென்று
மேய்பானை மறந்த ஆடுகள்
மந்தை வந்து சேர்வதில்லை
பெற்றோரை மறந்த பிள்ளைகள்
மனநிறைவோடு வாழ்வதில்லை
ஸ்ரீசந்திரா