வீடு வந்துடுச்சு

‘‘என்னங்க, நம்ம வீடு கிரகப்பிரவேசம் பண்றதுக்காக சொந்தக்காரங்களோட வந்திருக்கோம். இங்கேயே நின்னுட்டா எப்படி? காலா காலத்துல வீட்டுக்குப் போக வேண்டாமா?’’
‘‘அதுக்கில்லே புவனா, நாம இங்க அரை மணி நேரம் வெயிட் பண்ணாலே போதும்; நம்ம வீடே நம்மள தேடி வந்துடும். மேப்பை பார்.. இந்த ஆர்பிட்லதான் நம்ம வீடு சுத்திட்டிருக்கு.. ’’
‘‘லோகுவும் ப்ரியாவும் எங்கே? ’’
‘‘அதோ அங்க பறந்து பறந்து விளையாடிட்டிருக்காங்க. ’’
‘‘பால் காய்ச்சியாகணுமே, பாத்திரமிருக்கா?’’
‘‘பாத்திரம் தேவைப்படாது. பாலை அந்தப் பாறை மேல ஊத்து. உருண்டையா நின்னுடும். தானா காஞ்சிடும். அப்புறமா இந்தத் துணியப் போட்டு மூடி எடுத்துட்டு வந்துடு. அஞ்சு நிமிஷம் லேட்டானா முழுப் பாலும் ஆவியாயிடும்.’’
‘‘எக்ஸ்ட்ரா ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வந்துட்டீங்கள்ள? ’’
‘‘ஆக்ஸிஜன் சிலிண்டர் ரெடி. காலை டிபனுக்கு மூணு புரோட்டீன் மாத்திரை, ரெண்டு கார்போஹைட்ரேட் மாத்திரை, நாலு வைட்டமின் மாத்திரை, பத்து சொட்டு தண்ணீ. மதியத்துக்கு புரோட்டீன் மாத்திரம் போதுமில்ல? ’’
‘‘போதும்.. போதும்.. கிளம்பும் போது எல்லோருக்கும் இங்க் ஃபில்லர் நிறைய தண்ணி கொடுத்து அனுப்பணும்.. ’’
‘‘இங்க பாருங்க, கிலோ மீட்டருக்கு மேல கொடுக்காதீங்க. இங்க ஒரு கிலோ மீட்டர் ஆறே முக்கால் ரூபாய்தான். ’’
‘‘வீடு வந்துடுச்சு! வீடு வந்துடுச்சு! ’’
ஒரே தாவலில்..
கட்டிலிலிருந்து தரைக்கு வந்து விட்டான் கேசவன்.
ஓ! நேற்றுத்தான் மங்கள்யான் விட்டோம்; அதுக்குள்ளே செவ்வாய் கிரகத்துல ஆக்ஸிஜனையும் நீரையும் கண்டு பிடிச்சு, ப்ளாட் வாங்கி, வீடு கட்டி, கிரகப்பிரவேசம் நடத்தற மாதிரி கனவே வந்துடுச்சே!
வாழ்க மங்கள்யான்! வாழ்க இஸ்ரோ விஞ்ஞானிகள்!