பழனிக்குமாருக்கு வாழ்த்து

கவிதைக்கு கருத்தேடி அலைபவர் அல்ல
கவிதைப் பூந்தோட்டத்தின் தென்றலாம் பழனிக்குமார்
காணும் காட்சிகளில் கருப்பொருளைக் கண்டவுடன்
காளமேகமாய் கவிமழையைப் பொழிவார்
ஒவ்வொரு படைப்பினிலும் சமுதாய நலம்பற்றி
ஏதேனும் சொல்லாமல் இவரிருக்கமாட்டார்.

இரவலர்கள் முதியவர்கள் கொஞ்சுமொழிபேசும்
பிஞ்சுக் குழந்தைகள் ஆடவர் மகளிரென்று
யாரையும் விடாமல் கவிதையில் வரைந்திடும்
மனிதம் போற்றுகின்ற மகத்தான கவிஞரிவர்.

இயற்கையின் படைப்பில் இருக்கின்ற அனைத்துமே
இவரின் கவிதைகளில் இறவாமை பெற்றிடும்
உணர்வு அலைகளை ஒருங்கிணைத்துக் கவிதைகளாய்
எழுத்துக் கவிதளத்தில் அரங்கேற்றம் கண்டவர்
அவற்றையெல்லாம் தொகுத்து முத்தான நூலொன்றில்
மேதினிக்கு அளிக்கின்றார் அக்டோபர் பன்னிரெண்டில்

உள்ளம் கவர்ந்த உடன்பிறவா தம்பி பழனிக்குமார்
எழுத்துக் கவிஞர்கள் அனைவருக்கும் இனியநண்பர்
கவிஞர்கள் போற்றும் கவிஞராய் இருந்து
உணர்வு அலைகளை உலகறியச் செய்து
இன்னும்பல நூல்களை வெளியிட்டு வெற்றிபெற
அண்ணன் சுவாமிநாதன் அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (30-Sep-14, 10:51 am)
பார்வை : 206

மேலே