பெண் பிடிக்கிறது

பெண்ணை விட
உயரம் பையன் ..
படிப்பும் அதிகம்..
நிறமும் கொஞ்சம் கூட..
அதனாலென்ன..!
இவனுக்கு இவள்னு
இருக்கு போல!
..
பையனின் அம்மாவென்ற
பாழ் கிணற்று வாய் வழியே
வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
நெருஞ்சி முள்ளாய்
மனதில் தைக்க..
எழுதிப் போட்டாள்..
கடைசியாகக் கடிதம் ஒன்றை..
எழிலரசி .. தன்னிச்சையாக!
..
அன்பில்லா மனிதருக்கு,
என்னை பெண் பார்த்து
சென்ற நாள் முதலாய்
எதிர் பார்த்திருந்தேன்
உங்கள் சம்மதத்தை..
தரகர் வந்து உங்கள் தரம்
சொன்னார்!
பெரிய மனதாம் உங்களுக்கு!
என் குறைகள் எதையும் கூட
பொருட்படுத்தா மனது என்று!
அப்படியே இதையும் சொன்னார்..
சம்மதமாம் உங்களுக்கு ..
சவரன் மட்டும் அறுபதென்றும்
பையனுக்கு இருபதென்றும்..
ரொக்கமாக ஒரு லட்சம் போதும்
சிறிய கார் ஒன்று வேண்டும்
என்று நீங்கள் சொன்னதையும்!
..
இன்னும் கொஞ்சம் குள்ளமாக..
படிப்பில்லா பெண்ணுமாக..
நிறம் அட்டை கருப்பாக
இன்னும் கொஞ்சம் தேடித்தான்
பாருங்களேன்..!
கல்யாணச் சந்தையிலே
கிடைக்காதா என்ன!

எழுதியவர் : karuna (30-Sep-14, 11:15 am)
Tanglish : pen pidikkiradhu
பார்வை : 217

மேலே