சுரம் தந்த வரம்

புருவம் அசைத்தாய்
புல்லாங்குழல் இசைத்தேன்.....!

கண் ஜாடை செய்தாய்
கடம் இசைத்தேன்.....!

சிணுங்கி சிரித்தாய்
சித்தாரா இசைத்தேன்.....!

மன்றாடி வேண்டினாய்
மத்தளம் இசைத்தேன்.....!

வாயாடிப்பேசினாய்
வயலின் இசைத்தேன்.....!

பிடிவாதம் பிடித்தாய்
பியானோ இசைத்தேன்.....!

வீதியில் நடந்தாய்
வீணை இசைத்தேன்.....!

செல்போன் பேசினாய்
சைலபோன் இசைத்தேன்.....!

பக்கம் வந்தாய்
பறை இசைத்தேன்.....!

தயங்கி நின்றாய்
தம்புரா இசைத்தேன்.....!

இருமி நின்றாய்
உறுமி இசைத்தேன்.....!

கோபம் கொண்டாய்
கோடாங்கி இசைத்தேன்.....!

தலை கோதினாய்
தபேலா இசைத்தேன்.....!

தலைவனென்றாய்
தவில் இசைத்தேன்.....!

இனியும்
தம்பட்டம் இசைப்பேன்
நீ என்
சுரம் தந்த
வரம் என்று....!!!

எழுதியவர் : ம.கலையரசி (1-Oct-14, 11:58 am)
Tanglish : suram thantha varam
பார்வை : 102

மேலே