சீர்க்கெட்ட சிற்பியாய் நான் - இராஜ்குமார்

சீர்க்கெட்ட சிற்பியாய் நான்
==========================

கண்மணி நீ
கண்ணிமைக்கும் வரை

கல்லான உன்மனதை
எனது காதல்
சிலையாகச் செதுக்க

தினசரி முயற்சியோடு
சீர்க்கெட்ட சிற்பியாய் நான் ..!

ஒற்றை பூவிதழ்
அழகாய் சிரிக்காமல்
கோபமாய் முறைத்தாலும்

மயங்கும் எந்தன்
மனதிற்குள் - காதல்
காணாமலா போகும் ..!

பாரேன் ..
உன் பெயரை யாரின்
உதடோ உச்சரிக்க - உன்
புகைப்படம் பார்க்க
மறக்குது விழிகள் ..!

உந்தன்
புகைப்படம் பார்த்த
நொடிகளில் - உன்
பெயரை நானே சொல்ல
செவிடாகுது செவிகள் ..

பெண்ணே - எந்தன்
உறக்கத்தின் உளறல்
உள்வாங்கும் வார்த்தை நீயோ ?

- இராஜ்குமார்

நாள் ; 28 - 12 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (1-Oct-14, 6:58 pm)
பார்வை : 206

மேலே