அழகி

புடம் போட்ட தங்கம்
போல்
மின்னுகிறாய்

படம் ஒன்று வரைந்தால்
என்ன
முடியுமா என்கிறாய்

ரவிவர்மனின் தூரிகை
கிடைத்தாலும்
முடியாதே

அடம் பிடித்து நில்
என்றால்
ஒரு ஜென்மம்
போராதே

கவி ஒன்று தீட்டலாம்
என்றால்
கண்ணதாசனும்
இறந்தானே

புவி மேல் இன்று யார்
இருக்கிறார்
உன் எழில் பாட

சாவி போல் திறக்கும்
விழிகள்
காதல் நுழைவாயில்

வாவி போல் வளைந்திருக்கும்
இடை
ஓவியன் கனவு

ஆவி என நான்
கரைந்தேன்
காற்றின் துகள்களில்

வானப் படி ஏறி
விண் சாலைகளில் நான்
தவழ்ந்தேன்

உன்னை நான்
எப்படி
திரையில் வரைவேன்

எழுதியவர் : ரமணி (3-Oct-14, 5:13 am)
Tanglish : azhagi
பார்வை : 138

மேலே