சாளரத்தின் வழியே
என் இருள் நிறைந்த அறையிலிருந்து கொண்டு
உலகத்தை நோக்குகிறேன்
உலகமே இருண்டு கிடக் கிறது
உலகமே தெரியவில்லை எனக்கு!
தேடிப் பார்க்கிறேன் அவ் இருட்டினூடெ
என் அடையாளத்தை
என்னிடம் இல்லாத ஏதோவொன்றை என்னிடம்
கேட்கிறது காலம்!!!
என்னிடம் இல்லாத எதோவொண்டு எனும்போது
எதனை...................................................?
எனது வாழ்க்கையை
எனது காதலை
எனது விடை பகரும் தன்மையை
என்றே எல்லாம் விடை வருகிறது அல்லவா?
அதுவல்ல நிஜம்
நிஜத்தை சொல்வதே நிஜம்
இல்லாததையும் நடக்காததையும் கூறுவது நிஜமல்ல.
அம்மா!
எனக்கு மூச்சு அடைக்குமாப் போல கிடக்குது
நெஞ்ச்சளுத்தம் வாறமாதிரி கிடக்குது
இந்த யன்னலை கொஞ்சம் திறப்பமே
இந்த சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாம் என்னை
காப்பாத்துமே
பூட்டி வைத்து புளித்து நாறும் இவ் இருட் டரை யின்
பூட்டுக்கலை உடைத்து வெளியே
வா! என்னவளே! என்னவனே!
உதவி செய்யும் மனப்பான்மை ஒன்றிடுந்தால் மட்டுமே
போதும்!!!