என் அன்னை
(இது அப்துல் கலாம் எழுதிய கவிதை)
கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்திரிகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளி வாசல் தெரு -
இவை எல்லாம் ஒன்று கலந்த ஒரு உருவம் நீ,
என் அன்னையே!
சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய்
எனக்கு நீ வாய்த்தாய்
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு வருகின்றன
வாழ்க்கை ஓர் அறை கூவலாஇ அமைந்த
கொந்தளிப்பான காலம் அது -
கதிரவன் உதிப்பதற்கு பல மணி நேரம் முன்பே
எழுந்து நடக்க வேண்டும் வெகு தூரம்
கோவிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம்
பாடம் கற்கச் செல்லவேண்டும்
மீண்டும் அரபு பள்ளிக்கு பல மைல் தூரம்
மணல் குன்றுகள் ஏறி இறங்கி
புகை வண்டி நிலையச் சாலைக்குச் சென்று
நாளிதழ் கட்டை எடுத்து வந்து
அதைக் கோவில் நகரத்து மக்களுக்கு
விந்யோகிக்க வேண்டும்
இரவு படிக்கச் செல்லு முன்
மாலையில் அப்பாவுடன் வியாபாரம்
இந்தச் சிறுவனின் வேதனைகளை எல்லாம்
அன்னையே! நீ அடக்கமான வலிமையால்
மாற்றினாய்.
எல்லாம் வல்ல ஆண்டவனிடம் இருந்து மட்டுமே
தினசரி ஐந்து முறை துழுது
நீ உன் பிள்ளைக்கு வலிமையை சேர்த்தாய்
தேவை பட்டவர்களுடன் உன்னிடம் இருந்த
சிறந்தவற்றை நீ பகிர்ந்து கொண்டாய்
நீ எப்பொழுதும் கொடுப்பவளாகவே இருந்தாய்
இறைவனின் மீதான நம்பிக்கையும் சேர்த்தே
எத்தனயும் நீ கொடுத்தாய்
எனக்கு பத்து வயதாக இருந்த போது
நிகழ்ந்தது நன்றாக நினைவில் நிற்கிறது
ஒரு பவுர்ணமி நாள் இரவு அது
என் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள
நான் உன் மடியில் படுத்திருந்தேன்
என் உலகம் உனக்கு மட்டுமே தெரியும்
என் அன்னையே!
நள்ளிரவில் நான் கண் விழித்தேன்
என் முழங்கால் மீது உன் கண்ணீர்த் துளி பட்டு
உன் பிள்ளையின் வேதனை உனக்குத் தானே
தெரியும் தாயே?