அனுபவம்

பறந்து விரிந்த பாரினில்
பட்னியில் வாடிய என் நேரங்கள்
பணத்தை நான் தேடிய நாட்கள்
பணத்திற்காக ஓடிய நாட்கள்
ஓடிய கால்கள் தேய்ந்து போனது
தேடிய கண்கள் ஒய்ந்து போனது
தெரு தெருவாய்
சுற்ற வைத்த இந்த உலகம்
தோய்ந்து போன என் இதயத்திற்கு
ஒய்வு கொடுக்க வில்லை
நான் சென்ற இடங்களில் என் காலடி தடங்கள்
என் வாழ்கையின் ஆற வடுக்கள்
பல்லை காட்டி சிரித்தவர் மத்தியில்
படி படியாய் உயர்ந்த நான்
கற்றது
அனுவம் எனும் வாழ்க்கை