கலக்கல்

ஒரு சாக்கடையில்
இன்னோரு சாக்கடையைக்
கலக்கவிட்டால்
வீசும் துர்நாற்றத்தின்
வீரியம் தான் கூடும்
அதன் வாசம் எல்லோர்க்கும்
இல்வசமாய்க் கிடைக்கும்

--------

என்றோ சொன்னான்
ஜார்ஜ் பெர்னாட்ஷா
அரசியல் அயோக்கியர்களின்
கடைசி புகலிட்மென்று
இன்று அவன் இருந்தால்
திரைப்படங்கள் பற்றி
என்ன தான் சொல்வானோ?
யாருக்குத் தெரியும்!


"Politics is the last resort for the scoundrels"-George Bernard Shaw.





அரசியல் ஒரு சாக்கடை: ஹசாரே
புது தில்லி தினமணி
01 October 2012 06:25 AM IST

எழுதியவர் : மலர் (10-Oct-14, 12:55 pm)
Tanglish : kalakkal
பார்வை : 210

மேலே