தெரியவில்லை

காரணம் சொல்ல தெரியவில்லை
உன்னை கண்டதும்
எட்டிப்பார்க்கும் புன்னகைக்கு...
அர்த்தங்கள் ஏதுமில்லை
உனக்கு தெரியாமல் எடுத்த
புகைபடத்துடன்
பேசிய வார்த்தைகளுக்கு...
உணர்கிறேன்
நீயொரு நடிகையாய்.
தொலைவில் இருந்து பார்க்கும்
நானொரு இரசிகனாய்.....
சீ....போ என்று குறுந்தகவல்
அனுப்பி இருந்தாய்...
அந்த வார்த்தையை-நீ
எப்படி எல்லாம் உச்சரித்திருப்பாய்
என்ற வசன ஒத்திகையில்
நான்......