மழையாய் வருவாய்

சிற்றிடை ஓவியமே! உனைக் கண்டு
தெளிந்தவன் மனந்தனையே - நிதம்
விட்டு வழி விலகிச் செல்பவளே
உந்தன் வார்த்தையாலே!
சிற்பி செதுக்கிய போதை தரும்
பேரழகுப் பெண்மயிலே!- உனக்கு
எத்தனை யோபல தூது விட்டேன்
எனையொதுக்கி பிரிந்தவளே!
ஆயிரங் கோடி கற்பனைகள் அவை
யாவையும் தந்தவளே! - என்றன்
தூக்கத்தைத் துறந் திங்கு உழலுமென்
ஏக்கத்தை ஒழிப்பவளே!
கவலை மறந்தினி பறந்திடுவேன் உன்மனக்
கதவுகள் திறந்திடவே! - உயிர்
மூச்சது எனக்கு நீ தந்திடவே
வந்திடு வான்மழையே!