பக்தியா நடிப்பா

நான் ஏன் வருகிறேன்
உன்னை காண
வெள்ளிதோறும் அம்மன் கோவிலுக்கு ,
பௌர்ணமி தோறும் சிவன் கோவிலுக்கு ,
பிரதோசத்திற்கு சித்தர் கோவிலுக்கு ,
அமாவாசைக்கு காளி கோவிலுக்கு ,
இறைவா !!!
நான் ஏன் வருகிறேன்
உன்னை காண :
ஏன் வீட்டில் நீ இல்லை என்றா ;
பிற நாளில் நீ வரமாட்டாய் என்றா;
உன் மீது நான் கொண்ட பக்தியை விளம்பரப்படுதவா ?
இல்லை ஒரு வேலை அங்கு கிடைத்திடும் பிரசாததிர்க்க்வா ?
உண்ண உணவின்றி பலர் இருக்கையில்
உள்வந்து உன்னை காண்போருக்கு மட்டுமே பிரசாதம்
உள்ளதாய் உரைக்கும் குரல் உன் குரலா?
பசி உள்ளவனுக்கு பக்தி வருமா ?
உன் படைப்பின் அர்த்தம் புரிந்தோர் தான்
உன் கோவிலை நிர்வகிக்கின்றனர?
உன் மீது நானும் என்னை போன்ற மற்றோரும் கொண்டது பக்தியா? நடிப்பா ?

எழுதியவர் : அரங்கமொழியால் (11-Oct-14, 7:38 pm)
பார்வை : 60

மேலே