இதய தசையின் இசை - இராஜ்குமார்

இதய தசையின் இசை
========================
உனது எண்ணங்களை
எட்டிப் பிடித்து - அதற்கு
முத்தமிட்டு முழுமை செய்ய
துடிப்பதே எனது எண்ணமாம்
நீ நினைக்கும் நினைவை
தொட்டுப் பார்த்து - அதற்கு
மெட்டமைத்து இசைக்க
முயல்வதே எனது இதயமாம்
நமை படைத்தவன் பாதத்தை
பாறையில் செதுக்கி - அதற்கு
பாதுகாப்பாய் அவனையே
சிலையாக்குவதே உலக மனிதமாம்
துளி காதலும் பிடித்த எனக்கும்
காதலே துளியும் பிடிக்கா உனக்கும்
கடவுளுமில்லை ...
காதலுமில்லை ...
சரி விடு ..
உனது விருப்பம் போல்
காதல் ஏதுமில்லை ....
எனது விருப்பத்தை
புதைத்தது போல்
மறைத்து விட்டுப் போகிறேன் ...
மற்ற தசையின் இசையும்
இதய தசையின் இசையும்
ஒன்றல்ல எந்தன் உயிரில்
- இராஜ்குமார்
நாள் : 30 - 11- 2012