நான் என்னிடம் தோற்றாலும் - இராஜ்குமார்

நான் என்னிடம் தோற்றாலும்
============================
கனவுகள் துரத்திய
உறக்கம் - ஊமையாக
இமை இமைக்காத
பார்வை - நீயாக
விழியில் ஊடுருவும்
கதிரும் - புதிராக
பறந்த இதயம்
பாதை மறந்தாலும்
பாவை உனை மறவாது
விழுந்த மனம்
வீணாகிப் போனாலும்
கவி எழுதாமல் இறக்காது
மாறாத குணம்
என்னிடமே தோற்றாலும்
உனக்கு எதிராய் வெல்லாது
- இராஜ்குமார்
நாள் : 30 - 11 - 2011