எழுந்து வா…ஜப்பானே....
கல்லறைக்கு போனதாக
சொன்னார்கள்
இரண்டாவது உலகப் போரில்...
தாயின் கருவறையிலிருந்து
ஜனித்ததுபோல
புதிதாய் பிறந்தது
மீண்டும் ஒர்முறை
ஜப்பான்...
அணுகுண்டால்
அணு,அணுவாய்
துளைக்கப்பட்டு
இருண்டு கிடந்தது
ஒர்காலம்....
அணு உலைகளின்
தடையில்லாத
மின்சாரத்தால்
ஒளியில் மிதந்தது
பொற்காலம்....
முப்பது ஆண்டுகளில்..
முன்னூறு ஆண்டு சாதனை...
எரிமலை
புயல்
நிலநடுக்கமென்று....
சக்ர வியூகத்தில்
நாலாபுறங்களிலும்
சிக்கிக்கொண்ட
அபிமன்யு அல்ல ... நீ
சிக்கல்களை
சிதறடிக்கும் அர்ஜுனன்...
நம்பிக்கை
சிலுவையாய்
என்றென்றும் உன் இதயத்தில்....
தேனீக்களுக்கும்
ஜப்பானியர்களுக்கும்
எப்போதுமே போட்டியென்று
உலகத்திற்கே தெரியும்..
யார் சுறுசுறுப்பானவர்கள் என்று....
இயற்கையே
புரூட்டசாய் ஆனாலும்..
அழிக்க முடியாத...
ஜுலியச் சீசரல்லவா... நீ....?
ஆயிரம்
சுனாமிகள்
வந்தாலுமென்ன..
ஆழிப்பேரலையில்
மீண்டெழும்
ஜப்பான்...
கண்ணனை போல....
எழுந்து வா...
ஜப்பானே...
இழப்புகள் ஒன்றும்
புதிதல்ல
உனக்கு...
இந்த சுனாமி ....
வரிப்புலியின் உடம்பில்
இன்னுமோர் தழும்பு....
சூரியனே
மறையாத நாட்டை
இயற்கை சூழ்ச்சிகள்தானா
மறைக்கும்...??