பிறப்பும் இறப்பும்
பிறப்புகள் ஏராளம். - கூடவே
இறப்புகளும் ஏராளம்.
ஒரே நாள் பொழுதில்
ஒருவன் பிறப்பின்
ஒப்பற்ற வயதினைப்
பரிசாய்ப் பெறுகின்றான்.
அதே நாள் பொழுதில்
அடுத்தவன் இறப்பின்
இடுக்கண் மடியில்
உயிரைத் துறக்கின்றான்.
முன்னால் பிறந்தவர்கள் - வாழ்வின்
முகவரித் தேடி தேய்கின்றான்.
பின்னால் பிறந்தவர்கள் - வாழ்வின்
முகவரியில் வாழ்வதர்க்குள்
மடிந்துவிடுகின்றான்.
ஒருவன் பிறந்த அன்றே - மற்ற
ஒருவன் அன்றே இறக்கின்றான்.
பிறந்தவன் வீட்டில் மகிழ்ச்சி.
இறந்தவன் வீட்டில் துயர நிகழ்ச்சி.
காலம் என்ற தராசுத் தட்டில்
கணக்குகள் சரிசமமாய்
கணக்கிடப்படுகின்றன.
விடிந்ததும் சுவர் எங்கும்
வாழ்த்துக்களின் சுவரொட்டிகள்.
வீழ்ந்தவனுக்கும் சுவரொட்டிகள்.
வயதினைக் கூட்டிக் கொள்பவருக்கு
வாழ்த்துக் கவிதைகளுடன் - இறப்பில்
வீழ்ந்தவனுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.
வித்தியாசம் காணாத
விழிகள் அந்த சுவரொட்டிகளைக்
கண்டதும் துள்ளுமா? தவிக்குமா?