மழை என்பது யாதெனில்

வானெங்கும் மிதக்கின்றன மேகங்கள்
அவை நேற்று நான் பார்த்ததை போல் வெண்மையாக இல்லை!

கறை படிந்து காணப்பட்டன,
ஏன் என்றேன்?
கரையில் பனிந்தபோது படிந்த கறை என்றன அவை.

கடலிடம் சென்று,
கருதரித்து வந்து,
அதை மழையாக,அடைமழையாக ஊரெங்கும் தூவ விடும் இந்த மழைக்குத்தான் எத்தனை பிள்ளைகள்?

ஒவ்வொரு முறையும் பிரசவித்துவிட்டு, மீண்டும் பிரவேசிக்கின்றன!

மழை, ஒரு பெண்ணோ?
நிச்சயம் இருக்காது,அவ்வளவு கொடுப்பணை அந்த மழைக்கு இல்லை!

அந்திமாலை நேர,
அஞ்சனம் சூழ,
மேகம் வந்து ஈரம் பிழியும் தருணம்,
ஏற்படும் மாற்றங்கள் ஏராளம்.

அலுவல் அலுப்பில் இருப்பவரும் நிலுவைவிட்டு வீடு செல்ல,

இலவச விடுமுறைக்காக மழையிடம் மழலைகள் நன்றிக்கடனாளி ஆக,

சுற்றம் சற்று நேர சுகமாகிறது,
இளஞ்சுடு இரவல் தேவையாகிறது ,
ஒரு கோப்பை குளம்பி,ஒரு நோக்கமாகிறது ,
இப்படி பார்க்கையில்,மழை ஒரு பண்டிகையோ? இருக்காது,
தொலைக்காட்சியில சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லையே?

நிலமெல்லாம் கந்தகமாக,
நதியெல்லாம் இரண்டகம் செய்ய,
நட்டு வெச்சதெல்லாம் நற்கதி தேட,
கிரகத்தின் நீர் அனுவெல்லாம் திரட்டி, அனுகிரகம் செய்யும்
மழையே! நீ கடவுளோ?
இல்லயே, கோவிலும் கைங்கரியமும் இது கேட்பதில்லையே!

மழை குளிர்விப்பது மண்ணை மட்டுமன்றி மனங்களையும்!
ஈரம் கொண்ட மனம் பெற்றதால்
மழை ஒரு வகை மனிதம்!!

பேரிடி முழக்கமும்,
மின்னல் கீற்று அலங்காரமும்,
சதா ஜல அபிஷேகமும் அமைய பெற்றதொரு கடவுளத்துவமே, மழை!!

நீ வருவாய் நமோஸ்துதே!!
நீர் தருவாய் நமோஸ்துதே!!

எழுதியவர் : ஆனந்த் கஇரா (13-Oct-14, 10:18 pm)
சேர்த்தது : ஆனந்த் கஇரா
பார்வை : 66

மேலே