கவிமுரசு பழனிகுமாருக்கு வாழ்த்துப்பா
இணையாத இரயிலை இணைத்தாய் இன்று
இணையத்தின் முகத்தை மகிழ்ச்சியில் நனைத்தாய் நன்று
முகமறியா நட்பின் முகம் காணச் செய்தாய் நீ !
முதலாய் அகன் முகம் கண்டு அகம்மகிழ்ந்தேன்
உணராத உணர்வுகளை தொகுத்து
உணர்வலைகள் தந்தாய் நீ !
பண்பான பாசத்தால்
அன்பான பழனிகுமார் ஆனாய் நீ !
எண்ணத்தின் தூய்மையால் எம்
இதயத்தில் உயர்ந்தாய் நீ
எண்ணற்ற எழுத்துதல கவிஞருக்கும்
என்றென்றும் நீயே முன்னோடி !!
அன்பான உபசரிப்பு
அவ்வப்போது உன் புன்சிரிப்பு
நட்புகளை உறவாக்கி உறவாடி
நன்னூல் வழங்கிய எம் தோழா
உனக்கு வாழ்த்துரை வழங்குவேன் அன்பால் ...
முதல் நூல் வழங்கினாய் விரைந்து
முன்னூரை வழங்க ஆவல்
கவிதை தொகுப்பில் புது யுகம் படைத்தாய்
அதில் யாரைத்தான் விட்டுவைத்தாய் !!
அன்னைக்கும் தந்தைக்கும் கவி
அன்புக்கும் அனாதைக்கும் கவி
கேள்விக்கும் நீதிக்கும் கவி
சாதிக்கும் அரசியலுக்கும் கவி
இயற்கைக்கும் இன்பத்திற்கும் கவி
தமிழினத்திற்கும் பசிக்கும் கவி
காதலுக்கும் மனிதாபிமானத்திற்கும் கவி
துன்பத்திற்கும் போராட்டத்திற்கும் கவி
மழலை முதல் மயானம் வரை ..
நடப்பது இயற்கையென்ற போக்கினை
மாற்றியது உன் மை !
அச்சேறிய எழுத்துக்கள் அத்தனையும்
அவையத்து உண்மை !
வண்ண கவிதை இயற்றி
வாழ்த்துரைகளும் உம்மை போற்றி
எண்ணக் கவிதை இயற்றி
எழுச்சியுர செய்தாய் எம்மை நன்றி !!
வரவிருக்கும் எழுத்தாளனை
வரவேற்கும் உம் கவிதை
சிந்தனையில் உம் நினைவோடு
சிலாகித்து நான் மகிழ்ந்தேன் !
திருமணமோ திருவிழாவோ
பிறந்த தினமோ
பிறரை சேர்த்த தினமோ
நூல் வெளியீடோ
உறவுகளின் நூர்ப்போ
எதுவென்று அறியாமல்
திகைத்து நின்றேன் அரங்கத்தில் ...
கவியரசு காலடியில்
கவிதையின் முதல் தொகுப்பு
குருவணக்கம் செய்து குடியுயர்ந்தாய்
கவியரசு ஆசியால் கவிபேரரசாவாய்
வான் திறந்து இருவிழிகள் உனைநோக்க
வலை பிடித்த உம்கரங்கள் வானத்தை பார்க்க
மறுகரத்தில் சுத்தம் செய்யும் கருவிகாட்டி
கவிதை தொகுப்பால் சமூகத்தை சுத்தம் செய்வேன்
என்று உறுதி பூண்டாயோ!
வான்விழிகள் மிரட்சியில்
என்கவியை மிஞ்சிடுமோவென்று
கவியரசு கலக்கத்தில் காண்பதுபோல்
உணர்வலையின் முதலேடு
உண்பதிப்புகள் தொடரட்டும்
மனித மனம் மாறட்டும் !!
வாழ்த்துகிறேன் உம்மை
வானம் உள்ளவரை வாழ்கவென்று !