காதல் தவறா
![](https://eluthu.com/images/loading.gif)
நேர் கோட்டுப் பாதையில்
சங்கமிக்கும்
இரு இதயங்களின்
இடையினில்
இடைவெளி இருப்பதுவோ. , . . .
புவியீர்ப்பின்
சூத்திரம் அறியாமல்
விழியீர்ப்பின்
மகிமையைக் கண்கள்
உணர இயலுமா . . . . . . .
நடமிடும் காதஙின்
நளினம் அறியா
நல்லவன் உண்டெனில்
நாசமாய் போகட்டும்
நானிலம் முழுவதும் . . . . . .
உருகிடும்
பனியினை உட்கொண்டு
உள்ளம் சிலிர்ப்பவன்
உன்னத கண்ணீரையும்
உதாசீனம் செய்வான் . . . . . . .
கால காலமாக
காதலின் முடிவு
கல்லறை என்றா
கயவர்கள் எழுதி வைத்தனர் . . . . . .
மகத்துவம் அறியா
மனிதனின் மனது
மதத்தின் அடியில்
மண்டியிட்டல்லவோ
மரித்துப் போனது . . . . . .
சாதீய சாக்கடையில்
சல்லாபம் கொண்டு
சஞ்சாரம் செய்து
சதிவலை பிண்ணி
சாகாமல் மிதக்கிறான் . . . . .
பறவையின் அலகில்
காளையின் முகத்தில்
அணிலின் ஓட்டத்தில்
மயிலின் அகவலில்
எதிலில்லை காதல் . . . . . ,
இறைவனின் இஷ்டப்படி
இயற்கையின் இச்சைப்படி
இவனும் அவளும்
இனிதாகக் காதலால்
இரண்டறக் கலக்க
எவருக்குண்டு இங்கு
எதிர்க்கும் திறன் . . . . .
இயற்கையைக் காதலிக்கும்
இயல்பான மனிதன்
இயற்கையாகக் காதல் கொள்ள
இன்னும் என்ன தடங்கல் . . , .
பட்டினிச் சாவுகூட
பாரினில் வரலாம் . . . .
பாவம் காதலால்
கெட்டுனிச் சாவு
ஞாலத்தில் வேண்டாமே . . . . ,
*-*-*-*-*-*-*