காசத்துப் பரணி
அண்டிப் பிழைக்கன்றிங் கொதுங்கிய
முண்டி இடங்கண்டுத் தடவியே
சண்டித் தனம்கொண்டின் ருயிர்பறி -இசுரேலே
கள்ளத் தனமுள்ளத் திருந்திடும்
பள்ளத் தினில்முள்ளைத் திணித்திடும்
தள்ளிப் பிறர்எல்லைத் திருடிடும் -கொடுங்கோலே
பக்கத் துணைநக்கும் கொடியனாம்
மக்குத் தலைசிக்கல் பிரியனாம்
மக்கள் தலைவிற்கும் அமரிக்கா -இருந்தாலும்
ஹக்கன் அருளுக்கே இறைஞ்சுவம்
முக்கும் உமைகக்கி உமிழுவம்
புக்கி பினர்சுக்கென் றெமைஎணித் -துணிந்தாயோ
திக்குக் கதியற்ற அகதியே
கொக்குப் பிடிமச்சம் நாங்களோ
வெக்கம் கெடும்பக்கி மகன்களே -வரும்காலம்
உண்மை யொடுநன்மை வழியினில்
தன்மை பெறும்வெண்மை முறையினில்
மண்ணின் மகன்உன்னின் எமனென- வருவானே!
சுற்றம் எரிவெற்றிக் கொடியுடன்
வெட்டி யுமைகொட்ட மடக்கிட
கொட்டு மிடிபற்றும் கரத்துடன் -திகழ்வானே
எம்மக் களைபொம்மைக் குழுவென
வன்மத் தொடுசென்மம் அழித்திடும்
உம்மத் தகுணத்தை ஒழித்தினி -செயிப்பானே!