கொஞ்சமாவது செவி கொடு

அடுத்த மனை ரொம்ப நாளா
காலியா தான் கிடந்தது
மரங்களும் புதர்களும் மண்டியெ
பச்சை பசேல்னு இருந்தது

அசலூரு பறவை யெல்லாம்
ஆசுவாச பட்டது - வருசா
வருசம் குடும்பம் நடத்தி
கும்பலா திரும்பி போனது

புதர்களுக்குள் பாம்பும் பூச்சியும்
வாழ்ந்து வளர்ந்து மகிழ்ந்தது
கீரி பிள்ளை குடும்பம் கூட
குருக்க நெடுக்க ஓடிச்சு

வானில் வந்த மேகம் பாத்து
மழைய கொஞ்சம் தூவித்து
யாரு கண்ணு பட்டுச்சோ
அத்தனையும் போச்சு இப்போ

பத்து விரல் மோதிரமும்
பட்டை கழுத்து சங்கிலியும்
துட்டு கறை வேட்டியும்
போட்ட மசசான் வாங்கிப் புட்டான்

அய்யோ அம்மான்னு மரம் அலற
அங்கும் இங்கும் பாம்பு ஓட
அத்தனையும் சாச்சிப் புட்டான்
கட்டான் தரையா மாத்திப்புட்டான்

புல்லு டோசர் துணையோட
புல்லு பூண்டு அகற்றினான்
கல்லு மண்ணு கொட்டியே
காங்கிரீட் வீடு கட்டினான்

பல பேர் வேலை செய்ய
பல மாடி எழுந்தது
எல்லா வீட்டுக்கும் மறக்காம
கதவு ஜன்னல் இருந்தது

மூடிய ஜன்னல் வீட்டுக்குள்ளே
முட்டாப் பயலுக யாருங்கோ

வானில் வந்த மேகமும்
காணா பச்சை மரம் என்று
வேணாம் இவர்க்கு மழையென்று
வேண்டா வெறுப்பாய் சென்றது

ஊரிலிருந்து வந்த பறவை
காணா தன் வசந்த மாளிகையால்
மேகத்தோட கூடிப் பேசி
வேறு இடம் போனது

மூடிய சன்னல் திறந்து பார்
மூட முட்டாள் சனமே
நீ வாங்கிய குருவி கூட்டால்
எததனை குருவி தொலைந்தது

செய்த பாவம் போதும்
கொஞ்சமாவது செவி கொடு
நாலு பக்கம் சிமென்டை வெட்டி
நல்ல மரங்கள் நீ நடு

உன் புள்ளகுட்டி சந்ததியாவது
பறவைகள் ஒலி கேக்கட்டும்
வானில் வந்த மேகமாவது
நல்ல மழையை தூவட்டும்

எழுதியவர் : முரளி (21-Oct-14, 8:21 am)
பார்வை : 246

மேலே