கையூட்டின்்இலஞ்சம் கைசேதம்

கையூட்டின்(இலஞ்சம்) கைசேதம்

கம்பீரத்தின் உச்சமாய்
அரும் புகழின் மிச்சமாய்
மிகைமிகுந்த உயரமாய்
சிறிதும் சரியா சிறப்பதன்
சீர் மிகு இருப்பினில் ...
சற்றே கனத்த செருக்கினில்
மிடு மிடுக்காய் நின்றுவந்த
11 அடுக்குமாடி கட்டிடமதும்
வெட்கப்பட்டு,வேதனைப்பட்டு 
பெருத்த வருத்தப்பட்டு
ஓர் நாள் நாண்டு கொண்டு
மாண்டே போனது
கொடும் கையூட்டு பெறப்பட்டு   
தரப்பட்ட பட்டாவினில்
பகட்டாய் தான் கட்டப்பட்ட
சேதி கேட்டு .....

எழுதியவர் : (28-Oct-14, 6:48 pm)
பார்வை : 61

மேலே