வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதைப் போட்டி

வண்ண விழியாளே - காதல்
எண்ண மொழியாளே
வாழ்க்கை வாழ்வதற்கே.

எனக்காக நீயா - இல்லை
உனக்காக நானா?
உனக்கும் எனக்கும்
உறவு ஒன்று இருந்தால்
உள்ளத்தின் விடையாக
உறவாடுவோம் வா.-அதுதான்
வாழ்க்கை. - வாழ்க்கை வாழ்வதற்கே.

உன்கையும் என்கையும்
உருளும் அந்தவேளை - நம்
திருமணவேளை - அடியே.
உன்வீட்டாரும் என்வீட்டாரும்
கலந்துவிட்டார்கள்.
நீயும் நானும் நீண்டநாள் வாழ
முடிவு எடுத்துவிட்டார்கள்.
உன் வாழ்க்கை என்கையில்.
என்வாழ்க்கை உன்கையில்.
வாழ்க்கை வாழ்வதற்கே.

நீதான் என்வாழ்க்கை என
தெரிந்தப்பின் - என் பருவத்தின்
பக்கங்களை உனக்காக
பக்குவமாக வைத்திருக்கிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே.

நான்தான் உன்வாழ்க்கை என
நீ தெரிந்துக் கொண்டப்பின் உன்
நெஞ்சத்தில் எனக்கொரு
மஞ்சத்தை போட்டுவை.
கொஞ்சும்போது
கெஞ்சல்கள் இருக்கக் கூடாது.
ஏன் தெரியுமா வாழ்க்கை வாழ்வதற்கே.

என் வாழ்க்கையின் உதயமே
நீதானடி. - உனக்குள் இருக்கும் ஆசைகளுக்கு
நான்தானடி
உன் அடியும் என் அடியும்
படியும்போது மடியும் ஏக்க மாயைகள்.

பருவத்தின் விலாசங்கள் நாம்.
பக்குவமாய் வாழ்க்கையின்
முகவரியை அடைவோம்.
முகத்தோடு முகமாய்
வாழ்க்கையை அனுபவிப்போம்.
வாழ்க்கை வாழ்வதற்கே.

எழுதியவர் : ச. சந்திர மௌலி (29-Oct-14, 6:30 am)
பார்வை : 267

மேலே