அபிக்கூ காதல்
காலை எழுந்து
சோம்பல் முறித்து
தேடினேன் உன்முகமே -இல்லை
வாடிடும் என்மனமே
கனவில் வந்து
அணைக்கும் பெண்நீ
நனவினில் வருவதில்லை -மனம்
குளிர்ந்திட தருவதில்லை
உன்னை நானும்
உரிமை யோடு
அடைந்திடல் எப்போது ?-உளம்
குடையுதே இப்போது
பார்த்த முதலாய்
பறித்தாய் கருத்தை
அழகினில் உவமையில்லை-உன்னை
எழுதிடும் புலமையில்லை