உன்னிலும் என்னிலும் காதல்
மன்மதன் நானல்ல
மறுப்பது சொல்லிட
தடுப்பது முறையல்ல
உன் காதல் வந்திட
சிறைகொல்ல செய்திட
காதலும் தவறல்ல
கவிதை போல் நீ
ரசித்தால் பிழையல்ல
நினைக்கவும் மறக்கவும்
காதல் நிகழ்வல்ல
எதுவரை வாழ்க்கை செல்லுமோ
அதுவரை தொடர்ந்திடும் நிழலாய்
உன்னிலும் என்னிலும் காதல்