வனம்4
வனம்..4
சீரான இடைவெளியில் வளர்ந்து செழித்த மரங்களின் இடையே கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை போர்த்திய சமவெளிகள் தெளிவாய் தெரிந்தன.
இயற்கையின் அரவணைப்போடு முதுமலை சரணாலயத்தை அடைந்தோம். கிளம்ப தயார்நிலையில் ஓர் வாகனம் காத்திருந்தது. வேகமாக ஓடோடி பயண சீட்டை வாங்கினோம் நானும் நண்பரும்.
வண்டி எண் 420. நண்பரை அண்ணன் என்றுதான் அழைப்பது வழக்கம். என்னண்ணே 420 ன்னு வண்டி எண் கொடுத்து இருக்காங்களே என்று நான் கேட்க . அட.. வாங்க தம்பி .. அவுங்கவுங்களுக்கு தவுந்த மாதிரி தான் வண்டி கொடுப்பாங்க என அவர் சொல்ல. எல்லோரும் வாய்விட்டு சிரித்தோம் மெய்மறந்து.
தயார் நிலையில் இருந்த வாகனத்தில் வெகு ஆவலாய் ஏறினோம்.