காதல் அழிவதில்லை-

நீ வேண்டாம் என்றவுடன்
என் கால்கள் சென்றதடி
உன்னைவிட்டு தூரம் தூரம்
என் மனம் மட்டும் நின்றதடி
உந்தன் ஓரம் ஓரம்

வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று
வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம்

மாண்டும் மறையவில்லை
உந்தன் நினைவே நினைவு
நீதானே என் கல்லரையில்
நான் காணும் கனவே கனவு

- அழுகும் உடலுக்கு தெரிவதில்லை
காதல் அழிவதில்லை என்று...
சாகும் காதலர்க்கு தெரிவதில்லை
காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று...
----கல்லரைக் காதலன்

எழுதியவர் : கல்லரைச்செல்வன் (1-Nov-14, 8:25 am)
பார்வை : 250

மேலே