தாய் தந்தை அன்பு

தாய்:

கருவறையில் கிழிஞ்சலாய்
இருந்த என்னை முத்தாய்
பெற்றெடுத்த முதன்மை
தெய்வமே

நான் மண்ணை
தொடும் முன்னே
மரணத்தை தொட்டவளே

ஆயிரம் தெய்வங்கள்
வந்தாலும் அன்னை
ஒருத்திக்கு ஈடாகாது
எத்தனை உறவுகள்
இருந்தாலும் நம்
உறவுக்கு இணையாகாது

நான் கால்மிதியில்
கால் வைக்க நீ கால்மிதியின்றி
கருவேளங்காட்டில் கால்
பதித்தவளே
இனி நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் என்
என் கடன் தீராதம்மா

என் பசி தீர்க்க
தன் பசி மறந்தவளே

உன் உறக்கம் தொலைத்து
என்னை உருவாக்கியவளே

நீ என் மீது வைத்த
அன்பிற்க்கு அளவில்லை
அதை அளக்கவும் அகிலத்தில்
அளவுகோலும் இல்லை

மறுபிறவியில் நீ எனக்கு
மகளாக வேண்டும்
என் மடிமீது உன்னை
ஏந்தி நான் தாலாட்ட வேண்டும்


தந்தை:

கருவில் உன் உருவில்
உருவான உன் நகல்
உன் அறிவு பேரண்டத்தின்
ஒரு துகள்

ஆரம்பத்தில் அறியாதவராய்
அம்மாவின் அறிமுகத்தால் அப்பாவாய்
ஆறு வயதில் அண்ணனாய்
பதினாறு வயதில் தோழனாய்
நீ எடுத்த ஒவ்வொரு அவதாரமும் என் பருவத்தின்
பரிமானவளர்ச்சி என்பேன்

நீ தான் கற்றுக்கொடுத்தாய்
விடாமுயற்ச்சியையும்
விட்டுகொடுப்பதையும்

உன்னிடம் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
தன்னம்பிக்கையும்
நன்னடத்தையும்

உன் விரல் பிடித்து
நடக்கும் போதுதான்
உணர்ந்து கொண்டேன்
உலக நியதிகளை

நீ என்மீது வைத்த
அன்பிறக்கு இச்ஜென்மம்
உனக்கு அர்பணம்


பி..வேலுச்சாமி,
இளங்கலை இயற்பியல் 3_ஆம் ஆண்டு,
தேசிய கல்லூி,
திருச்சி_620001.

எழுதியவர் : வேலு வேலு (2-Nov-14, 12:22 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : thaay thanthai anbu
பார்வை : 1695

மேலே