ஓர் கனவு தேசம் அது

புழுதி புழக்கமும்
அங்கில்லை...
குருதிப் பகுப்பினம்
அங்கில்லை...
நடிகனுக்கு பாலாபிஷேகம்
அங்கில்லை...
நதி மாசுபடுதல்
அங்கில்லை...
போக்குவரத்து நேரிசல்
அங்கில்லை...
போக்குவரத்து சமிக்ஞை அங்கில்லை...
வறுமை நிழுலும்
அங்கில்லை...
நிலுவை நீதியும்
அங்கில்லை...
லஞ்ச ஊழலும்
அங்கில்லை...
வஞ்ச நினைப்பும்
அங்கில்லை...
சாதி அழுக்கும்
அங்கில்லை...
பாதி நிலவும்
அங்கில்லை...
மத வேறுபாடும்
அங்கில்லை...
இன பாகுபாடும்
அங்கில்லை...
காதல் கொலைகள்
அங்கில்லை...
சாதல் வார்த்தைகள்
அங்கில்லை...
ஆத்திக வெறியாரும்
அங்கில்லை...
நாத்திக பெரியாரும்
அங்கில்லை...
இச்சைவெறி அண்களும்
அங்கில்லை...
இச்சைபலி பெண்களும்
அங்கில்லை...
ஏமாற்றும் தேர்தலும்
அங்கில்லை...
ஏமாறும் மக்களும்
அங்கில்லை...
துரித உணவு
அங்கில்லை...
இணைய அரட்டை
அங்கில்லை...
வெடிகுண்டு சத்தமும்
அங்கில்லை...
உயிர்பறிக்கும் யுத்தமும்
அங்கில்லை...
துன்புறுத்தும் திவிரவாதமும்
அங்கில்லை...
துரத்தும் தீராவியாதியும்
அங்கில்லை..
கையாலாகாத கடவுளும்
அங்கில்லை...
சுயநல மனிதமனங்களும்
அங்கில்லை...
ஓர் கனவு தேசம் அது....