கலைத்துவிடாதே என் காதலை

வாடைக் காற்றும் வசை பாடுதடி
உன் வாசம் இல்லா
என் வீட்டை !

உன் நேசம் தேடி அலையும்
எனக்கு சுவாசம் கூட
சுமையாகிவிட !

வார்த்தை இல்லா என்
உதடுகள் என்ன
பேசிவிடும் உன்னிடம் !

மௌனம் சுமந்து நிற்கிறேன்
உன் முன்னாள் மட்டும்
ஊமையாகி !

உரையாடிக் கலைப்பதற்கு பதில்
விளையாடிக் கலைக்கிறாய்
என் மௌனத்தோடு !

கலைத்துவிடாதே
விளையாட்டாய் கூட
என் காதலை !

கலந்துவிடு உன்
இதழ் மையை
என் இதழோடு !

எழுதியவர் : முகில் (9-Nov-14, 1:10 pm)
பார்வை : 113

மேலே