காதல் முறிவு

அவளை சட்டென பிரிந்தேன்
எனசொல்ல முடியாது திட்டமிட்டே பிரிந்தேன்
உரையாடலைக் குறைத்தேன்
தேவையில்லாது எரிந்து விழுந்தேன்
வேலை பலு அதிகமென்றேன்
வீட்டில் வேறு பெண்
பார்க்கிறார்கள் என்றேன்
என் அன்னைக்கு
விருப்பம் இல்லை என்றேன்
கரும்பாக இனித்த உறவு
வேம்பாகக் கசக்கக்கண்டேன்,
அவளும் எத்தனை நாள்தான் பொறுப்பாள்
வெட்டிக்கொள் உன் உறவை என்றாள்
நானும் பிரிந்தேன்
சில மாதம் இனித்தது
பின் அவள் நினைவு என்னைக் கொன்றது
நின்ற இடம் பழகிய இடம்
அவள் நிற்கும் பேருந்து குடை
அவள் வழக்கமாக போகும் இடம்
வரும் இடமெல்லாம்
நான் தேடியும் கிடைக்கவில்லை
அவள் போகுமிடமெல்லாம் காத்திருந்தேன்,
அவள் முந்தானைக்குள்
மோகம் கொண்டு திரிந்தவன்
அவள் முகவரி கூடக் கேட்கவில்லை
அவள் இதயத்தின்
கற்பனைகளை கண்டு கொள்ளாதவன்
ஆம் மனித இனம் மட்டுமே
காதல் போர்வைக்குள்
காம உறக்கம் கொண்டு
விழித்ததும் போர்வையை வீசிவிடும் இனம் ,
மனிதக் காதலில்
செல்வத்தின் பங்குப் பெரியது
அவள் எந்தக்குலமாக இருபினும்
கோடிசுவரியாக இருந்தால்
காதல் புனிதமானது
ஒன்றும் இல்லதவலாக இருப்பின்
அவள் கொண்டது காதலே அல்ல வெறும் காமம்
எனும் மனித இனம்
மனிதநேயம் பேசும் எந்நாளும்

எழுதியவர் : சண்முகசுந்தரம் (10-Nov-14, 7:58 am)
சேர்த்தது : சண்முக சுந்தரம்
Tanglish : kaadhal murivu
பார்வை : 245

மேலே