ஒளி இழந்த நட்சத்திரம்

புல்லின் பனித்துளியும்
சூரியனும் இனைந்து
வைர முத்தாக்கி பரிசளித்தது
உனக்கு நெற்றி பொட்டிட...

அகிலம் சுற்றி
அழகான அருவின்
ஊற்றை அள்ளி வந்தாய்
பரிசல் இல்லாமல்
என் முகத்தில் தெளிக்க
உன்னை நான் துரத்த
நீ விளையாட்டை ஒட....

கண்கள் கலங்கி
கண்ணீரோடு காணப்பட்ட
நட்சத்திரங்கள்,
ஒளி இழந்து மண்ணில் விழுந்தன
வானம் வேண்டாம் என்றதால்
உன் ஒரு பொட்டு மூக்குத்திகாக.

மூங்கில் காற்றும்
மூலிகை வாசமும்
மான்குட்டி நடையும்
பனித்துளி இதழும்
மருதாணி வண்ணமும்
கை ரேகை தீர்ந்தும்
கைவிரல் தீண்டவே....

உந்தன் வெள்ளி கொலுசு
என்னால் சத்தமிடுகையில்
வெட்கப்படும் பூமியியையும்
ரசிக்கும் வானத்தையும்
கதை கேட்கும் மேகத்தையும்
கவணிக்கவில்லை நான்...

வெள்ளைத்தாள்களும்
பதிப்பகங்களும் தயாராகிவிட்டன
உன் பெயரையும்
என் பெயரையும்
அழைப்பிதழில் நம்மை அறிந்தவர்கள்
படிக்க....

எழுதியவர் : மணிகண்டன் சுகன் (10-Nov-14, 10:01 pm)
பார்வை : 167

மேலே