+காதலியே+

கண்ணுக் குள்ள
என்ன வச்சு
கண்ணே எங்கே கடந்தியோ
ரயிலால் விலகும்
மரங்கள் போல
மனசு பின்னே பறக்குதே
மனசுக் குள்ள
இதயம் வச்சு
இந்த இதயம் பிடிச்சியோ
நீர்வீழ்ச்சிக் குள்ள
மாட்டிய நுரையாய்
இதயம் கெடந்து துடிக்குதே
சின்னச் சிரிப்பை
மின்னல் நொடிக்குள்
எனக்காய் சிதற விட்டியோ
ஜல்லிக் கட்டில்
பாயும் காளையாய்
நெஞ்சம் துள்ளிக் குதிக்குதே
என்னை முழுசா
தின்னுப் புட்டு
காதலில் விழுந்து கெடந்தியோ
அமையப் போகும்
வாழ்வை எண்ணி
நாட்கள் நகர்த்தி வாழ்கிறேன்!