ஒற்றுமைதான் வேணும் தம்பி

இயேசுவும்.........
நபியும்............
முதலிடம் பிடிப்பதில்
போட்டிதாரிகள்
ஆனார்கள்.

அன்பே சிவம்
என்றவர்கள்
களியாட்டக் களிப்பில்
களைகள் ஆனார்கள்.

பகுத்தறிவு சொன்ன
புத்தன்
கண்களை மூடி
அடுத்தவன் நிலத்தை
கபளீகரம் செய்கிறான்.

விருதுகளுக்கான
பதிவுகள்
கடந்த காலத்தை
காசாக்கி விட்டு
ஒற்றுமைதான்
வேணும் தம்பி என்கிறது.

அமைதியும் .......
ஒற்றுமையும்.......
விருது பெற்ற
மகிழ்வில்
மயங்கிக் கிடக்கிறது.

யாதும் ஊரே
யாவரும் கேளீர்
என்றவனுடன்
மனிதமும்
சிதைக்கப் படுகிறது.

வார்த்தைகள் மட்டும்
ஓங்கி ஒலிக்கின்றன
ஒற்றுமைதான்
வேண்டும் தம்பி.

#

எழுதியவர் : செல்வநேசன். (12-Nov-14, 11:50 am)
பார்வை : 110

மேலே