என் இனிய சகிக்கு-வித்யா
என் இனிய சகிக்கு-வித்யா
என் மனமெல்லாம்
உன் நலம் வாழ்த்தும்
இன்றுனை நான் வாழ்த்த மறந்ததேனோ....
கொஞ்சும் அன்பும்
ததும்பும் அக்கறையும்
செல்லக் கோபமும்
மெல்ல புன்னகையும்
உன்னிடம் வேண்டுகிறேன்......
தோழி நீ
நடப்பாய் இனித்திடு.....
எனை மன்னித்துவிடு......!
கன்னி உன்னிதயம்
கவர்ந்த மணாளனுடன்
மணம்சேர்ந்து வாழ்வு
தாண்டியும் வாழவேண்டும்.........!!
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சகி............!